என் மலர்

  செய்திகள்

  மெயினருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
  X
  மெயினருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

  குற்றாலம் அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
  தென்காசி:

  தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை, தென்மேற்கு பருவ மழை ஆகிய 2 பருவ மழைகளும் பெய்யும். கடந்த ஆண்டில் இந்த இரு பருவ மழையுமே மக்களை ஏமாற்றியது. குற்றால சீசனும் கண்ணாமூச்சி காட்டியது.

  இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவ கற்று வீசியது. அவ்வப்போது மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. சுமார் ஒருவார காலம் நீடித்த இந்த குளிர்ந்த காலநிலை பின்னர் அப்படியே தலைகீழாக மாறியது. கடந்த ஒருவாரமாக குற்றாலத்தில் வெயில் சுட்டெரித்தது. அருவிகளில் தண்ணீர் மிக குறைவாக விழுந்தது.

  குறைந்த அளவு விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று மீண்டும் வீச தொடங்கியது. இன்று அதிகாலையில் இருந்து குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

  இதமான கால நிலை நிலவியது. அவ்வப்போது பெய்த மழையினால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் அதிக அளவு விழுந்தது. இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

  மெயின் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சீசன் முழுமையாக இல்லா விட்டாலும் குற்றாலத் துக்கு கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சீசனை எதிர்பார்த்து ஏராளமான கடைகளும் முளைத்துள்ள‌ன.  Next Story
  ×