என் மலர்

  செய்திகள்

  ஜனாதிபதி தேர்தல் ஆதரவுக்கு எதிர்ப்பு: ஓ.பன்னீர்செல்வம் - அமைச்சர்கள் பேனர்கள் கிழிப்பு
  X

  ஜனாதிபதி தேர்தல் ஆதரவுக்கு எதிர்ப்பு: ஓ.பன்னீர்செல்வம் - அமைச்சர்கள் பேனர்கள் கிழிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜனாதிபதி தேர்தலில் மத்திய அரசுக்கு ஆதரவாக இரு அணிகளும் செயல்பட்டதாலேயே திண்டுக்கல்லில் வைக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பேனர்கள் கிழிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
  திண்டுக்கல்:

  திண்டுக்கல் பேகம்பூர் பங்களா மேட்டைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் என்ற இக்பால். இவர் 38-வது வார்டு முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். தற்போது 38-வது வார்டு அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.

  இவரது வீட்டில் இன்று அதிகாலை 2.15 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் ஒரு பொருள் விழுந்தது. இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து எழுந்து பார்த்தபோது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் திரியுடன் பற்ற வைக்கப்பட்டு சிலர் இக்பால் வீட்டின் மீது வீசிச்சென்றது தெரிய வந்தது.

  ஆனால் திரி எரியாததால் பயங்கர சத்தம் மட்டும் கேட்டு தீ பிடிக்காமல் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இச்சம்பவம் திண்டுக்கல் நகரில் காட்டுத் தீ போல் பரவியதால் ஏராளமானோர் குவிந்தனர்.

  சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தனர்.

  அந்த பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

  திண்டுக்கல் பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் ஒவ்வொரு வருடமும் ஜமாத்தார்கள் சார்பில் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளை அழைத்து இப்தார் நோன்பு வழங்கப்படும்.

  இதில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த வருடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்கும் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெறுவதாக இருந்தது.


  அமைச்சர் சீனிவாசனை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டிருக்கும் காட்சி

  இதற்காக அமைச்சர் சீனிவாசனை வரவேற்று அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை ஒரு தரப்பினர் அந்த பேனர்களை கிழித்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  அந்த இடத்துக்கு சற்று அருகே ஓ.பி.எஸ். அணி சார்பில் ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்த அதனையும் சிலர் கிழித்து சேதப்படுத்தினர்.

  இது குறித்து போலீசாருக்கு தகவல் வரவே இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

  டெல்லியில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு அ.தி.மு.க.வின் 2 அணிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. மேலும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய தரப்பினர் டெல்லிக்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.

  மத்திய அரசுக்கு ஆதரவாக இரு அணிகளும் செயல்பட்டதாலேயே பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் முன்பு வைக்கப்பட்ட அ.தி.மு.க. அணிகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

  Next Story
  ×