என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை அருகே ஆம்னி பஸ்-லாரி நேருக்குநேர் மோதல்: டிரைவர் பலி
கோவை:
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு நேற்று இரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. இன்று அதிகாலை 2.30 மணி அளவில் பஸ் கோவை எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் கல்லாங்காட்டு தோட்டம் பகுதியில் வந்து கொண்டிந்தது.
அப்போது கோவையில் இருந்து கேரளாவுக்கு மீன் லோடு ஏற்றி சென்ற லாரியும் பஸ்சும் நேருக்குநேர் மோதியது. இதனால் பயங்கர சத்தம் கேட்டது. பஸ்சில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் கண் விழித்து அலறினர்.
இந்த விபத்தில் லாரி டிரைவரான கடலூர் அருகே உள்ள ராசகுப்பம் யாதவர் தெருவை சேர்ந்த செந்தில் முருகன்(வயது 36) என்பவர் சம்பவஇடத்திலேயே பரிதாப மாக இறந்தார்.
மோதிய வேகத்தில் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. பஸ்சின் கண்ணாடிகளும் உடைந்து சிதறியது.
ஆம்னி பஸ் டிரைவரான வேலூர் மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த மவுரியன் (26) மற்றும் லாரி கிளீனர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு செட்டிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த லாரி கிளீனர், ஆம்னி பஸ் டிரைவர் ஆகியோரை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் பலியான லாரி டிரைவர் செந்தில்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.