என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
Byமாலை மலர்31 May 2017 9:20 AM GMT (Updated: 31 May 2017 9:20 AM GMT)
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர் பெஞ்சமின், எம்.எல்.ஏ.க்கள் கோ.அரி, ஏழுமலை, சிறுணியம் பலராமன், நரசிம்மன், மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மண்எண்ணை கேனுடன் வாலிபர் ஒருவர் வேகமாக ஓடி வந்தார். திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் வாலிபரை தடுத்து நிறுத்தி மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திருவள்ளூரை அடுத்த விடையூரைச் சேர்ந்த கர்னல் குமார் என்பது தெரிந்தது.
கர்னல்குமார், நெமிலி அகரத்தைச் சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு திவ்யாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து சென்று விட்டனர். பின்னர் அவரை அனுப்பவில்லை.
இதுகுறித்து கர்னல் குமார் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அமைச்சர் பங்கேற்ற விழாவில் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×