என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாட்டு இறைச்சிக்கு தடை: திண்டுக்கல்லில் தினசரி ரூ.5 கோடி வர்த்தகம் பாதிக்கும் அபாயம்
Byமாலை மலர்31 May 2017 5:52 AM GMT (Updated: 31 May 2017 5:52 AM GMT)
மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திண்டுக்கல்லில் தினசரி ரூ.5 கோடி வர்த்தகம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
திண்டுக்கல்:
இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மாட்டு சந்தைகள் மற்றும் மாட்டு இறைச்சி கடைகளில் வியாபாரம் முடங்கியுள்ளது. திண்டுக்கல் நகர் பகுதியில் பேகம்பூர், பொன்மாந்துறை புதுப்பட்டி, குட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் முன் காலத்தில் 100-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இருந்தன.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கிடுக்கிப்பிடியால் தற்போது 20 தோல் தொழிற்சாலைகள் மட்டும் உள்ளது. இதனை நம்பி 2000 தோல் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தற்போது மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
திண்டுக்கல் நகர் பகுதியில் 3 மாட்டு இறைச்சி வெட்டும் கூடம் உள்ளது. 50-க்கும் மேற்பட்ட மாட்டு இறைச்சி கடைகள் உள்ளன. வாரம் தோறும் 300 மாடுகள் வெட்டப்படுகிறது. இங்கு வெட்டப்படும் மாட்டு இறைச்சிகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.
இறைச்சிக்காக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, மேலூர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அய்யலூர், மணப்பாறை, தஞ்சை, கரூர் மாவட்டம் உக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து மாடுகள் வாங்கி வரப்படுகிறது.
இறைச்சி தவிர வாரம் தோறும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாட்டு தோல்கள் பேகம்பூர் பகுதியில் பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாட்டு இறைச்சிக்கு தடை உத்தரவால் திண்டுக்கல் நகர் பகுதியில் மட்டும் தினசரி ரூ.5 கோடி வர்த்தகம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது தவிர இதனை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தோல் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Story
×