என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தென்மேற்கு பருவமழை தொடங்கியது: குமரியில் இன்றும் பலத்த மழை
நாகர்கோவில்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது.
கேரளாவில் பருவமழை தொடங்கியதும் அதன் எல்லையில் உள்ள குமரி மாவட்டத்திலும் மழை பெய்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் முதலே குமரி மாவட்டத்தில் மழை கொட்டத் தொடங்கியது.
நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் குமரி மேற்கு மாவட்ட மலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, குலசேகரம், பத்து காணி, ஆறுகாணி, திருவட் டார், வேர்கிளம்பி பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இதுபோல குமரி கிழக்கு மாவட்ட பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கன்னியாகுமரி, சாமித்தோப்பு, அகஸ்தீஸ்வரம், ஆரல்வாய்மொழி, தோவாளை, பூதப்பாண்டி பகுதிகளிலும் பல மணி நேரம் சாரல் மழை பெய்தபடி இருந்தது.
இன்று காலையிலும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. கருங்கல், குளச்சல், புதுக்கடை, தேங்காய்பட்டணம் பகுதிகளிலும் காலை முதலே மழை கொட்டியது.
மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக திகழும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணை பகுதிகளிலும் மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கி உள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் ஒற்றை இலக்கத்திற்கு சென்ற அணைகளின் நீர்மட்டம் இப்போது பெய்து வரும் மழையால் கணிசமாக உயரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளும், விவசாயிகளும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அதற்கேற்ப இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவிற்கு பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
குமரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, பேச்சிப்பாறை அணையில் 9.50 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 121 கனஅடி தண்ணீர் வருகிறது. பெருஞ்சாணி அணையில் 18.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 26 கனஅடி தண்ணீர் வருகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-
பேச்சிப்பாறை-18, பெருஞ்சாணி-3, சிற்றாறு-1- 13.2, சிற்றாறு-2-6, அடையா மடை-2, முள்ளங்கினா விளை-7, புத்தன் அணை-3.4, திற்பரப்பு-23.8, பூதப் பாண்டி-2.5, சுருளோடு-10, பாலமோர்-22.2, கன்னிமார்-2.5.
குமரியில் மழை பெய்து வருவதை தொடர்ந்து திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் கொட்டுகிறது. கடந்த 2 மாதமாக நிலவிய வெப்பமும் தணிந்து மாவட்டம் முழுவதும் குளிர் போர்வை போர்த்தியது போல் இதமான சீதோஷ்ணம் நிலவுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்