என் மலர்

  செய்திகள்

  ஏற்காட்டில் பலத்த மழை: மலர் கண்காட்சிக்கு தயாரான பூக்கள் சேதம்
  X

  ஏற்காட்டில் பலத்த மழை: மலர் கண்காட்சிக்கு தயாரான பூக்கள் சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏற்காட்டில் நேற்றிரவு பெய்த மழையால் மலர் கண்காட்சிக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான பூக்கள் சேதம் அடைந்தது.
  சேலம்:

  சேலம் மாவட்டம் ஏற்காடு கோடை விழாவை இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

  தோட்டக் கலைத்துறை சார்பில் ஏற்காடு அண்ணா பூங்காவில் 1 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பிரமாண்ட மலர் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கான பூக்கள் அனைத்தும் நேற்றே தயாராக வைக்கப்பட்டிருந்தது.

  இந்த நிலையில் நேற்றிரவு ஏற்காட்டில் 38.2 மி.மீ. மழை பெய்தது. இதனால் மலர் கண்காட்சிக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான பூக்கள் சேதம் அடைந்தது. அதனை மீண்டும் சரி செய்யும் பணியில் இன்று காலை முதலே பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் மலர் கண்காட்சி 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

  ஏற்காட்டில் நேற்றிரவு பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியமான சூழல் நிலவியது. இன்றும் வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தது.

  ஏற்காட்டில் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர். சாரை சாரையாக சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சென்றதால் ஏற்காடு மலையில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன. ஏற்காடு கலையரங்கம், அண்ணா பூங்கா, மான் பூங்கா, படகுழாம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட் உள்பட பல பகுதிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

  Next Story
  ×