என் மலர்

    செய்திகள்

    சென்ட்ரலில் பூமிக்கடியில் பிரமாண்ட மெட்ரோ ரெயில் நிலையம்
    X

    சென்ட்ரலில் பூமிக்கடியில் பிரமாண்ட மெட்ரோ ரெயில் நிலையம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்ட்ரலில் பூமிக்கடியில் பிரமாண்ட மெட்ரோ ரெயில் நிலையம் 2 அடுக்குகளில் நவீனமாக உருவாகிறது. மெட்ரோ ரெயில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தற்போது திறக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

    இதில் கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா முதல் பரங்கிமலை ஒரு வழித்தடத்திலும் சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் ஓடுகின்றன.

    சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் பூமிக்கடியில் 2 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்மேடு செல்லும் மெட்ரோ ரெயில் என 2 அடுக்குகளாக பூமிக்கு அடியில் நவீனமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    தரையில் இருந்து கீழே 10-வது மீட்டரில் பயணச்சீட்டு நிலையமும், 17-வது மீட்டரில் முதல் வழித் தடத்துக்கான ரெயில் பாதையும், 21-வது மீட்டரில் 2-வது வழித்தடத்துக்கான பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.


    இந்த ரெயில் நிலையம் 388 மீட்டர் நீளமும், 333 மீட்டர் அகலமும் கொண்டு 70 ஆயிரம் சதுர அடியில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம், சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையம், பூங்கா நகர் பறக்கும் ரெயில் நிலையம், பூங்கா நகர் ரெயில் நிலையம் ஆகிய 4 முக்கிய ரெயில் நிலையங்களுக்கு இணைப்பு வழியாக 4 சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன.

    இதில் பூங்கா நகர் ரெயில் நிலையம் - சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் வளாகம் இடையிலான சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தற்போது திறக்கப்பட்டுள்ளன.

    மேலும் சென்னை மெட்ரோ ரெயில் கழகம் மூலம் சுமார் 400 கோடி செலவில் ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொதுமக்கள் கூடும், புறநகர் ரெயில் நிலையம், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம், சென்னை ரெயில்வே தலைமை அலுவலக கட்டிடம், சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு பொது மருத்துவமனை, பூங்காநகர் ரெயில் நிலையம் மற்றும் ராமசாமி முதலியார் சத்திரம் ஆகியவற்றுக்கு அருகே உள்ள பகுதிகள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட்டு சென்ட்ரல் சதுக்கமாக அமைக்கப்பட உள்ளது.

    சென்னை சென்ட்ரல் சதுக்கத்தில் பயணிகளுக்கான வசதிகள், கீழ்தளத்தில் வாகன நிறுத்தும் வசதி, பாத சாரிகளுக்கான நடைபாதை, தரைதள வாகன நிறுத்தும் வசதி ஆகியவற்றை கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட பல தரப்பட்ட போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும்.

    Next Story
    ×