என் மலர்

  செய்திகள்

  விருதுநகரில் பஸ்சை வழிமறித்து கண்டக்டரிடம் பணப்பை பறிப்பு
  X

  விருதுநகரில் பஸ்சை வழிமறித்து கண்டக்டரிடம் பணப்பை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனியார் பஸ்சை வழி மறித்து கண்டக்டரிடம் இருந்த பணப்பையை 2 பேர் பறித்துச்சென்றனர்.

  விருதுநகர்:

  விருதுநகரில் இருந்து காடநேரிக்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று இரவு காடநேரி சென்று விட்டு, விருதுநகர் திரும்பி கொண்டிருந்தது. பஸ்சில் ஒரு சில பயணிகளே இருந்தனர்.

  காடநேரி விலக்கு பகுதியில் பஸ் வந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து வழிமறித்தனர். அவர்களில் ஒருவன் பஸ்சுக்குள் வேகமாக ஏறினான்.

  அவன் நேராக கண்டக்டர் சிங்கராஜிடம் சென்று அவர் வைத்திருந்த பணப்பையை பறித்தான். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டான்.

  கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் பயணிகள் மற்றும் கண்டக்டருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இதுகுறித்து நத்தம்பட்டி போலீசில் சிங்கராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணப்பையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×