என் மலர்

  செய்திகள்

  திருவிடைமருதூர் அருகே கோழிக்கறி சாப்பிட்ட சிறுமி பலி: 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
  X

  திருவிடைமருதூர் அருகே கோழிக்கறி சாப்பிட்ட சிறுமி பலி: 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவிடைமருதூர் அருகே கோழி குழம்பு சாப்பிட்ட சிறுமி இறந்தார். 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

  சுவாமிமலை:

  திருவிடைமருதூர் அருகே வல்லக்குடியை சேர்ந்தவர் வேணி. இவரது மகள்கள் திவ்யா (வயது 9), அனுசுயா (வயது 10). இவர்களது பாட்டி லெட்சுமி (வயது 58).

  இவர்கள் வீட்டில் நேற்று இரவு கோழிக்கறி சமைத்து குழம்பு வைத்து அனைவரும் சாப்பிட்டு உள்ளனர். பின்னர் அனைவரும் தூங்க சென்றனர். அப்போது அவர்களுக்கு திடீர் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை ஆடுதுறை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

  ஆனால் வழியிலேயே சிறுமி திவ்யா பரிதாபமாக இறந்தார். இதைகண்ட அவரது குடும்பத்தினர் கதறி துடித்தனர். பின்னர் மற்ற 3 பேரையும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு லெட்சுமி, வேணி, சிறுமி அனுசுயா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இறந்த சிறுமி திவ்யா வல்லக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகையில், கோழிக்கறி சாப்பிட்ட இவர்களுக்கு புட்பாய்சன் ஏற்பட்டதால் இது ரத்தத்தில் கலந்து உள்ளது என்றனர். இதுகுறித்து தகவலறிந்த திருவிடைமருதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  கோழிக்கறி சாப்பிட்டு சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

  Next Story
  ×