என் மலர்

  செய்திகள்

  ஓ.பன்னீர்செல்வத்தை 3 முறை முதல்வராக்கியது சசிகலா: புகழேந்தி பேச்சு
  X

  ஓ.பன்னீர்செல்வத்தை 3 முறை முதல்வராக்கியது சசிகலா: புகழேந்தி பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓ.பன்னீர்செல்வத்தை 3 முறையும் முதல்-அமைச்சராக்கியது சசிகலாதான் என திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டததில் கர்நாடக செயலாளர் புகழேந்தி பேசியுள்ளார்.
  திருப்பரங்குன்றம்:

  திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. (அம்மா அணி) சார்பில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இதில் கர்நாடக மாநில அம்மா அணி செயலாளர் புகழேந்தி பங்கேற்று பேசியதாவது:-

  சமீபத்தில் அமைச்சரும், எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் சசிகலாவை சந்தித்துள்ளனர். இதில் இருந்தே ஆட்சியும், கட்சியும் சசிகலா கையில்தான் உள்ளது என்று தெரியவில்லையா?

  இன்னும் 62 எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் கொடுத்து இருக்கிறார்கள்.

  ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தபோது உணர்ச்சி மிகுதியால் 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

  அவர் ஆஸ்பத்திரியில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டால் இன்னும் அதிகமான தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்ற காரணத்தால் புகைப்படத்தை வெளியிடவில்லை.

  ஓ.பன்னீர்செல்வம் 3 முறை முதல்-அமைச்சராக இருந்தேன் என மார்தட்டிக் கொள்கிறார். அவர் எப்படி முதல்-அமைச்சராக வந்தார் என்று நினைக்கவில்லை.

  ஓ.பன்னீர்செல்வத்தை 3 முறையும் முதல்-அமைச்சராக்கியது சசிகலாதான். அதை மறந்து தற்போது கட்சிக்கு துரோகம் செய்து வருகிறார். அவருடைய செயல் மக்களிடம் எடுபடாது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் குண்டு கல்யாணம் பேசியதாவது:-

  1972-ல் எம்ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை 32 ஆண்டுகளுக்கு பிறகும் தொடர்ந்து மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்து வரலாறு படைத்த பெருமை அம்மாவிற்கு உண்டு.

  அதுவும் தேர்தல் வரலாற்றில் இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக உயர்த்தி சாதனை படைத்தவர் அம்மா. இத்தகைய அ.தி.மு.க.வை ஓ.பன்னீர்செல்வம் தனது சுயநலத்திற்காக பாரதிய ஜனதாவிடம் அடகு வைக்க பார்க்கிறார். அது ஓரு போதும் முடியாது.

  இரட்டைஇலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று பொய் வழக்கு போட்டார்கள். லஞ்சம் கொடுப்பவர் ஒருவர் இருந்தால் வாங்குபவர் ஒருவர் இருக்க வேண்டுமல்லவா? அவர் யார்? அதைப்பற்றி சொல்லவே இல்லை.

  தற்போது நம்பர் 5 ராசி என்று கூறி தேர்தல் தேதியை மாற்ற சொன்னதாக கூறியதாகவும் சொல்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் பிரதமர் மோடியை நினைத்தார் என்று கூட வழக்கு போடுவார்கள். இத்தகைய பொய் வழக்கு போட்டு டி.டி.வி.தினகரனை மடக்க பார்க்கிறார்கள்.

  மக்களின் தலைவராக உள்ள தினகரனை பார்த்து பாரதிய ஜனதா பயப்படுகிறது. எத்தனை வழக்கு போட்டாலும் அதை சட்டரீதியாக சந்தித்து முறியடித்து வெளியே வருவார். மேலும் இரட்டை இலையை மீட்டு எடுப்பார்.

  இவ்வாறு அவர் பேசினார்.
  Next Story
  ×