search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதலனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டிக்கொன்ற வாலிபர்
    X

    கள்ளக்காதலனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டிக்கொன்ற வாலிபர்

    கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் திசையன்விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உபகாரமாதாபுரத்தை சேர்ந்தவர் ஜான்பால். பந்தல் தொழிலாளியான இவரது மனைவி பொன் இசக்கி (வயது  28). இவர்களுக்கு திருமணமாகி  8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் பொன் இசக்கிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த ஜான்பால் மனைவியிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறிவந்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு  இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்று இரவு ஜான்பால் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினார். அப்போது கதவை அவரது மனைவி வெகு நேரமாகியும் திறக்காததால் ஜான்பால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது அங்கு பொன் இசக்கி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  ஜான்பால் நிற்பதை பார்த்த பொன் இசக்கியின் கள்ளக்காதலன் பின் பக்க வாசல் வழியாக தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து வீட்டிற்குள் சென்ற ஜான்பால் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த ஜான்பால் மனைவியை அரிவாளால் சரமாரியாக கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பொன்இசக்கி பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் ஜான்பால் திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது மனைவியை வெட்டிக் கொன்று விட்டதாக கூறி சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த இடத்தை நெல்லை  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்தி குமார், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் இன்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் திசையன்விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×