என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை செயலகத்தில் வெங்கையாநாயுடு ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு
Byமாலை மலர்15 May 2017 9:36 AM GMT (Updated: 15 May 2017 9:36 AM GMT)
தலைமை செயலகத்தில் மத்திய மந்திரி வெங்கையாநாயுடு ஆலோசனை கூட்டம் நடத்தியதன் மூலம் தமிழக அரசை, பாரதிய ஜனதா கட்டுப்படுத்துகிறதா? என அரசியல் பார்வையாளர்களிடையே சந்தகேத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
மத்திய மந்திரி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். நேற்று அவர் நேரு பூங்கா முதல் திருமங்கலம் வரையிலான சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். பிறகு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையடுத்து சென்னையில் நேற்று அவர் சென்ற வழித்தடங்களில் பா.ஜ.க. கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. மோடி மற்றும் வெங்கையா நாயுடு படங்களும் வைக்கப்பட்டிருந்தன.
அனைத்துக்கும் மேலாக சென்னையில் வெங்கையா நாயுடு கலந்து கொண்ட கூட்டங்களில் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சென்னை திருமங்கலத்தில் நடந்த மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் மோடி படமும், அவரது படமும்தான் பெரிதாக இடம்பெற்றிருந்தது.
அதுபோல அண்ணாநகரில் வழிநெடுக அ.தி.மு.க. கொடிகளுக்கு இணையாக பாரதிய ஜனதா கட்சிக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஓரணியில் இருப்பது போன்ற உணர்வை மக்களிடம் இவை ஏற்படுத்தின.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் மத்திய நகர்ப்புற வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் லேசான பரபரப்பை ஏற்படுத்தியதோடு பலரது புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.
ஏனெனில் தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய மந்திரிகள் யாரும் இப்படி தங்கள் துறை சார்ந்த ஆலோசனை கூட்டத்தை தலைமை செயலகத்தில் நடத்தியதே இல்லை. மத்திய மந்திரி வெங்கையாநாயுடு இப்படியொரு கூட்டத்தை நடத்தியதன் மூலம் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழகத்தின் அ.தி.மு.க. அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் செயல்பாடுகளுக்கு அச்சாரமிட்டு இருப்பதாக கருதப்படுகிறது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை மத்திய அரசு இத்தகைய செயல்கள் எதிலும் ஈடுபட்டதே இல்லை. இன்னும் சொல்ல போனால் ஜெயலலிதாவை பார்த்து மத்திய அரசுதான் பயப்பட்டது. ஜெயலலிதா 50 எம்.பி.க்களுடன் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர் என்ற அந்தஸ்துடன் இருந்ததால் அவருடன் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு எந்த சிறு உரசலிலும் ஈடுபட்டதே இல்லை.
மத்திய மந்திரிகள் தமிழ்நாட்டுக்கு வந்தாலும், அவர்கள் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது என்ற ரீதியில்தான் இருந்தனர். தமிழ்நாட்டுக்குள் வந்து ஜெயலலிதாவை மீறி எதுவுமே செய்துவிட முடியாது என்பதை உணர்ந்து பா.ஜ.க. மத்திய மந்திரிகளும் நடந்து கொண்டனர்.
ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு தற்போது நிலமை தலைகீழாக மாறிவிட்டது. அ.தி.மு.க. இரண்டாக பிளவு பட்டதால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை அனுசரித்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு அ.தி.மு.க. அரசு தள்ளப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் நிலை பலவீனமாக காணப்படுவதால், பா.ஜ.க. தமிழக அரசின் உள் விவகாரங்களிலும் தலையிட தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. நேற்று தலைமை செயலகத்தில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு நடத்திய ஆலோசனை கூட்டத்தை இதற்கு உதாரணமாக சொல்கிறார்கள். மத்திய மந்திரிகள் யாரும் இதுவரை இப்படி நடந்து கொண்டதில்லை.
அதுவும் அந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பங்கேற்க வைத்ததையும், அவருடன் சேர்ந்து பத்திரிகையாளர்களுக்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேட்டி அளித்ததையும் குறிப்பிட்டு சொல்கிறார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் மத்திய மந்திரி இப்படி நடந்து கொண்டிருக்க முடியுமா என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதற்கு முன்பு மெட்ரோ ரெயில்வே சேவை தொடக்க விழா நடந்தபோது கூட மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஒரு இடத்திலும், ஜெயலலிதா இன்னொரு இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெங்கையா நாயுடு தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி போட்டியளித்ததன் மூலம் அவர் தமிழக அரசை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவே கருத்து எழுந்துள்ளது. இதுபற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறுகையில், “மத்திய அரசின் திட்டம் பற்றி முதல்-அமைச்சரை அழைத்து மத்திய மந்திரி ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. முதல்-அமைச்சர் பதவி மாநிலத்தில் உயர்ந்தது. எனவே இத்தகைய ஆலோசனை கூட்டத்தை தலைமை செயலகத்தில் நடத்தாமல் வேறு எங்காவது நடத்தியிருக்க வேண்டும்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “மத்திய மந்திரி தன் துறை ஆய்வு கூட்டத்தை முதல்-அமைச்சரை வைத்துக்கொண்டு நடத்தி இருப்பதன் மூலம் தமிழக முதல் வரை அவர் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயல்வது போல உள்ளது. இது நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவ அமைப்பு முறைக்கே எதிரானது” என்றார்.
அரசியல் பார்வையாளர்கள் அனைவரும், “மத்திய அரசு பெரிய அண்ணன் மனப்பான்மையுடன் தமிழக விவகாரங்களில் நடக்க தொடங்கியுள்ளது” என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

Next Story
×