search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தரமற்ற உணவுப்பொருள் விற்பனை: குளிர்பானம் - பழக்கடைகளில் அதிகாரிகள் சோதனை
    X

    தரமற்ற உணவுப்பொருள் விற்பனை: குளிர்பானம் - பழக்கடைகளில் அதிகாரிகள் சோதனை

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு குழுவினர் பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், டீக்கடைகள், குளிர்பான கடை, பழக்கடைகளில் சோதனை நடத்தினார்கள்.
    திருவள்ளூர்:

    அக்னிநட்சத்திரம் இன்று தொடங்குவதையடுத்து கோடை வெப்பம் பொதுமக்களை கடுமையாக வாட்டி வருகிறது.

    வேலை நிமித்தமாக வெயிலில் சென்று வருவோர் தாகம் தணிக்க கடைகளில் விற்கும் பழம், குடிநீர் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்களை வாங்கி அருந்துகின்றனர். தற்போது குடிநீர், குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

    பொது மக்கள் வாங்கி அருந்தும் டீ, குடிநீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள், குடிநீர் குளிர்பானங்கள் கலப்படம் உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் முத்துக்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு குழுவினர் திருவள்ளூரில் திடீர் ஆய்வு நடத்தினார்கள்.

    திருவள்ளூர் பஜார், சிவிநாயுடு சாலை, ஜெ.என் ரோடு உள்ளிட்ட பகுதியில் பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், டீக்கடைகள், குளிர்பான கடை, பழக்கடைகளில் சோதனை செய்யப்பட்டது.

    சோதனையின் போது தரமற்ற குளிர்பானம், கார்பைனைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், தடை செய்யப்பட்ட டீத்தூள் மற்றும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் முத்துக்குமார் கூறுகையில் “மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் தரமற்ற பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்து இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்

    Next Story
    ×