search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேஸ் இதுதான்.
    X
    கோவை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேஸ் இதுதான்.

    கோவை விமான நிலையத்தில் அனாதையாக கிடந்த மர்ம சூட்கேஸ்

    கோவை விமான நிலையத்தில் அனாதையாக கிடந்த மர்ம சூட்கேஸ் சம்பவத்தால் அப்பகுதியில் இன்று சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் நுழைவு வாயில் அருகில் உள்ள சாலையில் இன்று காலை 10-15 மணியளவில் அனாதையாக ஒரு மர்ம சூட்கேஸ் கிடந்தது.

    இதை பார்த்த சிலர் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் விரைந்து வந்து மர்ம சூட்கேசை பார்வையிட்டனர்.

    இந்த சூட்கேசின் உரிமையாளர் யார்? என்று விசாரித்தனர். ஆனால் யாரும் சொந்தம் கொண்டாடதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியே வந்தார்.

    அங்கு நின்ற மத்திய பாதுகாப்பு படை வீரர்களிடம், ‘‘தான் காரை விட்டு இறங்கும் போது சூட்கேசை வைத்து சென்று விட்டதாக கூறினார்.

    பிறகு அவரிடம் விசாரணை செய்ததில், அவரது பெயர் சோம்நாத் (வயது 40), என்பதும் வடமாநிலத்தை சேர்ந்த அவர் கோவையில் வேலை செய்து பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    மேலும் கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் செல்ல அவசரமாக புறப்பட்டதில் சூட்கேசை மறதியாக விட்டு சென்றதும் தெரிய வந்தது.

    பின்னர் அவரது சூட்கேசை திறந்து சோதனை செய்த போது, அதில் துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே இருந்தது.

    மர்ம சூட்கேஸ் சம்பவத்தால் கோவை விமான நிலைய பகுதியில் இன்று சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×