search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற கோரி 19-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம்
    X

    அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற கோரி 19-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம்

    அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற கோரி பிப்ரவரி 19-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர்-கோவை- ஈரோடு ஆகிய மாவட்டங்களின் விவசாயம் -குடிநீர் பிரச்சனைக்கு அவினாசி - அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி கடந்த ஆண்டு போராட்ட குழுவினர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    12 நாட்கள் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி அரசாணை வெளியிட்டது.

    இதனால் போராட்ட குழுவினர் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

    இதற்கிடையே அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் ஆரம்ப கட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் திட்ட பணியை விரைவில் தொடங்க கோரி திருப்பூர் மாவட்ட விவசாயிகளும், போராட்ட குழுவினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிற பிப்ரவரி 19-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

    ஆனாலும் இந்த திட்டம் அப்படியே இருப்பதால் அதை நினைவு கூறும் வகையில் வருகிற 19-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    அவினாசியில் 19-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×