என் மலர்

  செய்திகள்

  பரணீதரன்
  X
  பரணீதரன்

  காரைக்கால் கடலில் மூழ்கிய மாணவன் கதி என்ன?: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நண்பர்களுடன் குளித்தபோது காரைக்கால் கடலில் மூழ்கிய பிளஸ்-2 மாணவனை தேடும் பணி 2-வது நாளாக தீவிரமாக நடந்து வருகிறது.
  காரைக்கால்:

  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் பரணீதரன்(வயது 17). மன்னார்குடியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

  தேர்வு நெருங்குவதால் பரணீதரன் மற்றும் அவருடன் படிக்கும் மாணவர்கள் 19 பேர் பூந்தோட்டத்தில் உள்ள சரஸ்வதி கோவிலுக்கு சென்றனர்.

  தேர்வில் வெற்றிபெறுவதற்காக சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். பின்னர் அவர்கள் பூந்தோட்டம் பகுதியில் இருந்து காரைக்காலுக்கு பஸ்சில் வந்தனர்.

  மதியம் 2 மணியளவில் காரைக்கால் கடற்கரை பகுதிக்கு வந்து சேர்ந்தனர். நண்பர்களுடன் சேர்ந்து பரணீதரன் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்தார்.

  கடலில் நீந்தச் சென்ற பரணீதரனை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியில் உள்ள மீனவர்களிடம் கூறினர். போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

  உடனடியாக காரைக்கால் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

  கடலில் மூழ்கிய பரணீதரனை தீயணைப்பு படையினர் தேடினர். பலன் இல்லை. இரவு முழுவதும் தேடினர்.

  காலையில் மீண்டும் தேடும் பணி தொடங்கியது. பரணீதரன் கிடைக்கவில்லை. அலையில் சிக்கிய அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

  மாணவன் பரணீதரனின் பெற்றோர் தகவல் அறிந்து கடற்கரைக்கு வந்தனர். அங்கு கண்ணீர் மல்க காத்து நிற்கின்றனர்.  Next Story
  ×