என் மலர்

  செய்திகள்

  இந்திய தேசியலீக் கட்சியின் உண்ணாவிரத போராட்டம்: தடா அப்துல் ரகீம்
  X

  இந்திய தேசியலீக் கட்சியின் உண்ணாவிரத போராட்டம்: தடா அப்துல் ரகீம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் நாளை இந்திய தேசியலீக் கட்சியின் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தடா அப்துல் ரகீம் அறிக்கை விடுத்துள்ளார்.
  சென்னை:

  இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரகீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  பழனிபாபாவின் 20-வது ஆண்டு நினைவு நாளான நாளை (28-ந் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடக்கிறது.

  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தால் அரசியல் கட்சி தலைவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், சமுதாய அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

  முஸ்லீம் சமுதாயத்தின் மீது தொடர்ந்து நடத்திவரும் அடக்கு முறை, 19 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் 48 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.

  அனைத்து சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் பரோல் முஸ்லீம் சிறை வாசிகளுக்கு மட்டும் வழங்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அறப்போராட்டம் நடைபெறுகிறது.

  இதில் தமிழகம் முழுவதும் இருந்து திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×