என் மலர்

  செய்திகள்

  டி.ராஜேந்தர் பேட்டி அளித்தபோது எடுத்த படம்.
  X
  டி.ராஜேந்தர் பேட்டி அளித்தபோது எடுத்த படம்.

  ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுக்காதது ஏன்?: அ.தி.மு.க. எம்.பி.க்கள் மீது டி.ராஜேந்தர் தாக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரும்பாலான எம்.பி.க்கள் இருந்தும் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த அ.தி.மு.க. முயற்சிக்கவில்லை என்று லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் கூறினார்.
  அவனியாபுரம்:

  தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்திட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்தப்பட்டு வருகின்றன. இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு குழு மற்றும் பொதுமக்கள் சார்பாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

  அங்குள்ள கண்மாய்க்கரை அருகே உள்ள அய்யனார் கோவிலில், ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி இந்த வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.

  இந்த நிகழ்ச்சியில் லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தரும் கலந்து கொண்டு அய்யனாரை தரிசித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும். தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த 2 ஆண்டுகளாக தடையின் காரணமாக நடைபெறவில்லை. இது 3-வது ஆண்டாக நீடிக்காமல் இருக்க போராட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. வீரம் நிறைந்த மண்ணில் தமிழர்களின் உணர்வையும் வீரத்தையும் காக்க நடத்தப்படுவது ஜல்லிக்கட்டு.

  இதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை... தடை என கூறிவருவது எத்தனை நாளைக்கு? இதற்கு முடிவு இல்லையா? தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு பெரும்பாலான எம்.பி.க்கள் இருந்தும், அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி எடுக்கவில்லை. மாநில அ.தி.மு.க. அரசு இதற்காக குரல் கொடுக்கவில்லை.

  ஜால்ரா தான் போடுகின்றனர். அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடை நடுங்கி எம்.பி.க்களாக உள்ளனர்.

  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை ஆகியோர் மக்களிடம் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக்கூறி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடியிடம் கூறவில்லை. நமஸ்காரம் தான் செய்கின்றனர். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற முழு ஆதரவுடன் லட்சிய தி.மு.க. செயல்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×