என் மலர்

  செய்திகள்

  வீட்டு வாசலில் படமெடுத்தபடி நின்ற பாம்பு.
  X
  வீட்டு வாசலில் படமெடுத்தபடி நின்ற பாம்பு.

  குலசேகரத்தில் வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திய நாய்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குலசேகரத்தில் வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்தி எஜமானரை காப்பாற்றிய நாய்களின் விசுவாசத்தை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டனர்.
  குலசேகரம்:

  குலசேகரம், அரசமூடு பகுதியில் வசித்து வரும் ஒருவர் வீட்டில் 3 நாய்கள் வளர்த்து வருகிறார்.

  இந்த நாய்களை இரவு நேரத்தில் காவலுக்கு அவிழ்த்து விடுவது வழக்கம். நேற்று இரவு 9 மணி அளவில் அவிழ்த்து விடப்பட்ட நாய்கள் வாசல் அருகே நின்ற படி பயங்கரமாக குரைத்தது.

  இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர், கதவை திறந்து வாசல் பக்கம் சென்று பார்த்தார்.

  வீட்டு வாசல் முன்பு ஒரு நல்ல பாம்பு நின்று கொண்டு வீட்டுக்குள் நுழைய முயன்றபடி ஊர்ந்து கொண்டிருந்தது. அதனை 3 நாய்களும் வழிமறித்து நின்றபடி வீட்டுக்குள் நுழைய விடாமல் அங்குமிங்கும் ஓடி தடுத்து கொண்டிருந்தது.

  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர், அவரும் சேர்ந்து பாம்பை விரட்ட முயன்றார். ஆனால் பாம்பு மீண்டும் சீறியபடி வீட்டுக்குள் புகுந்து விட முயற்சி செய்தது. உடனே அவர் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் வனத்துறையினருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

  இதற்குள் பாம்புக்கும், நாய்க்கும் இடையே நடந்த மோதலை வேடிக்கை பார்க்க அந்த பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்து விட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன்பின்பே அங்கு ஏற்பட்ட பரபரப்பு அடங்கியது.

  பிடிப்பட்ட பாம்பை வனத்துறையினர் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டு வந்தனர். வீட்டு எஜமானை பாதுகாக்க பாம்புடன் மல்லுக்கட்டிய நாயின் விசுவாசத்தை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பேசி சென்றனர்.
  Next Story
  ×