என் மலர்

  செய்திகள்

  சேலம் குகையில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
  X

  சேலம் குகையில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் குகை அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சேலம்:

  சேலம் குகை அருகில் உள்ள பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் கருங்கல்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  நேற்று மாலை இந்த மாணவி வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் கழிவறை பகுதிக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயவேலு (வயது 30) என்பவர் மாணவியின் பின்னால் கழிவறை பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் மாணவியிடம் பாலியல் தொல்லை செய்தார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டு கத்தினார். இதை கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடிவந்து சிறுமியை வாலிபரிடம் இருந்து மீட்டனர். பின்னர் வாலிபரை அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

  பிறகு அந்த வாலிபர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மாணவிக்கு பாலியல் தொல்லை செய்த ஜெயவேலு மீது போக்சோ சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  இந்த சம்பவம் குகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×