என் மலர்

  செய்திகள்

  பழைய ரூபாய் நோட்டு தருவதாக மோசடி: தொழில் அதிபரிடம் ரூ. 5 லட்சம் பறித்த 2 பேர் கைது
  X

  பழைய ரூபாய் நோட்டு தருவதாக மோசடி: தொழில் அதிபரிடம் ரூ. 5 லட்சம் பறித்த 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழைய ரூபாய் நோட்டு தருவதாக தொழில் அதிபரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  பூந்தமல்லி:

  சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் விஜயராஜ் ரியல்எஸ்டேட் தொழில் அதிபர்.

  இவரிடம் கெருகம்பாக்கத்தை சேர்ந்த செல்வம், ரூ. 5 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் கொடுத்து அதற்கு பதிலாக ரூ. 5 லட்சத்து 40 ஆயிரத்துக்கு பழைய ரூ. 500, 1000 நோட்டுகள் தருவதாக தெரிவித்தார்.

  இதனை நம்பிய விஜயராஜ் ரூ. 5 லட்சம் பணத்துடன் நண்பர்கள் பாலா ராஜேஷ் ஆகியோருடன் குன்றத்தூரை அடுத்த தரைப்பாக்கம் அருகே காத்திருந்தார்.

  அப்போது கூட்டாளிகளுடன் வந்த செல்வம் விஜயராஜ் வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தை பறித்தார். மேலும் கற்கள் இருந்த பையை அவர்களிடம் கொடுத்து தப்பி சென்றுவிட்டார்.

  பணத்தை இழந்த விஜயராஜ் இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், அவரது நண்பர் கார்த்திகேயனை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

  இது தொடர்பாக செல்வத்தின் கூட்டாளிகள் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×