search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசிய போது எடுத்த படம்.
    X
    திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசிய போது எடுத்த படம்.

    விவசாயிகளின் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

    விவசாயிகளின் தொடர் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
    திருவாரூர்:

    தமிழகத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்து தமிழகம் ழுழுவதும் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று முன்தினம் தொடர் முற்றுகை போராட்டத்தை தொடங்கினர்.

    நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோருடன் முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இது குறித்து முத்தரன் கூறியதாவது:-

    வருகிற 30-ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் உணவு, வேளாண்மை, கைத்தறி மற்றும் வருவாய் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் விவசாய சங்க தலைவர்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முத்தரசன் அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
    Next Story
    ×