என் மலர்

  செய்திகள்

  ஆதார் எண் இணைக்கப்படாத குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வினியோகம் நிறுத்தம்
  X

  ஆதார் எண் இணைக்கப்படாத குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வினியோகம் நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆதார் எண் இணைக்கப்படாத குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
  கிருஷ்ணகிரி:

  கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 லட்சத்து 63 ஆயிரத்து 974 குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளன. தற்போது குடும்ப அட்டைகளை 100 சதவீதம் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

  இதில் உண்மையாக நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகள், குடும்ப அட்டையில் உண்மையாக உள்ள குடும்ப உறுப்பினர்கள் விவரம் மற்றும் குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவரின் ஆதார் எண்கள் இணைக்கும் பணி ஆகியவை குறித்து சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

  இந்த பணி கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளார்கள், ஊராட்சி எழுத்தர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், புதுவாழ்வு மற்றும் மகளிர் திட்டம் ஆகிய பணியாளர்களைக் கொண்டு நடைபெற்று வருகிறது. கள அளவில் சரிபார்ப்பு பணியின் போது நடைமுறையில் இல்லாத குடும்ப அட்டைகள் என கண்டறியப்பட்ட குடும்ப அட்டைகளும், ஆதார் எண், மொபைல் எண் எதுவும் குடும்ப அட்டையுடன் இணைக்கப்படாமலும், குறிப்பிட்ட முகவரியில் இல்லாமலும் உள்ள சந்தேகத்திற்கிடமான குடும்ப அட்டைகளும் தற்காலிகமாக பொருட்கள் நிறுத்தம் செய்யப்படும்.

  அவ்வாறு பொருட்கள் நிறுத்தம் செய்யப்பட்ட குடும்ப அட்டைகள் விவரம் சம்பந்தப்பட்ட அங்காடியில் பட்டியலாக ஒட்டப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் 15 நாட்களுக்குள் தங்களுடைய குடும்ப அட்டையுடன் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×