என் மலர்

  செய்திகள்

  10 டன் ரேசன் அரிசியுடன் பிடிபட்ட லாரியை படத்தில் காணலாம்
  X
  10 டன் ரேசன் அரிசியுடன் பிடிபட்ட லாரியை படத்தில் காணலாம்

  களியக்காவிளை அருகே லாரியில் கடத்திய 10 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  களியக்காவிளை அருகே லாரியில் கடத்திய 10 டன் ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒரே லாரியில் 10 டன் அளவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்பட்டுள்ளது குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  களியக்காவிளை:

  குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் தாசில்தார் இக்னேசியஸ் சேவியர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கேரளாவுக்கு கடத்தப்படும் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

  நேற்று பறக்கும் படை தாசில்தார் இக்னேசியஸ் சேவியர், துணை தாசில்தார் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் களியக்காவிளை - கொல்லங்கோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

  அப்போது கேரளா பதிவெண் கொண்ட ஒரு லாரி வேகமாக வந்தது. அந்த லாரியை சுற்றி தார்ப்பாய் போடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த லாரியை நிறுத்தச் சொன்னார்கள். ஆனால் டிரைவர் நிறுத்தாமல் வேகமாகச் சென்றார்.

  இதையடுத்து அதிகாரிகள் ஜீப்பில் ஏறி லாரியை துரத்தினர். சிறிது தூரம் சென்ற நிலையில் செங்கவிளை என்ற இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். அதிகாரிகள் தார்பாயை பிரித்து உள்ளே இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.

  சாக்கு மூட்டைகளின் மீது பாஸ்மதி பிரியாணி அரிசி என எழுதப்பட்டு இருந்தது. மூட்டைகளை பிரித்து பார்த்தால் அனைத்து மூட்டைகளிலும் ரே‌ஷன் அரிசி தான் இருந்தது. லாரியில் மொத்தம் 10 டன் அரிசி இருந்தது. அவற்றை லாரியுடன் சேர்த்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  பின்னர் ரே‌ஷன் அரிசி லாரியுடன் கலெக்டர் அலுவலகம் கொண்டு வரப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர். அதன்பின் ரே‌ஷன் அரிசி மூட்டைகள் உடையார்விளை அரிசி குடோனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

  ஒரே லாரியில் 10 டன் அளவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்பட்டுள்ளது குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடத்தலில் தொடர்புடையவர் யார்? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.


   * * * 10 டன் ரேசன் அரிசியுடன் பிடிபட்ட லாரியை படத்தில் காணலாம்.

  Next Story
  ×