என் மலர்

  செய்திகள்

  சொத்துக்குவிப்பு -செம்மண் குவாரி வழக்கு: பொன்முடி மீதான விசாரணை ஒத்திவைப்பு
  X

  சொத்துக்குவிப்பு -செம்மண் குவாரி வழக்கு: பொன்முடி மீதான விசாரணை ஒத்திவைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சொத்துக்குவிப்பு மற்றும் செம்மண் குவாரி வழக்கில் பொன்முடி மீதான விசாரணை ஜனவரி 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  விழுப்புரம்:

  விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

  இதுதொடர்பாக இருவர் மீதும் கடந்த 2002-ம் ஆண்டு விழுப்புரம் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தவழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

  நீதிபதி (பொ) சுபா.அன்புமணி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன் முடி, விசாலாட்சி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற ஜனவரி மாதம் 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

  இதேபோல் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கும் நேற்று விசாரணைக்கு வந்தது.

  பொன்முடி, கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன் ஆகியோர் ஆஜராகவில்லை. மற்ற 5 பேரும் ஆஜரானார்கள். அப்போது அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் ஆஜராகி இந்த மனு மீதான எதிர் உரையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கூறினார்.

  இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி (பொறுப்பு) சுபா அன்புமணி உத்தரவிட்டார்.
  Next Story
  ×