என் மலர்

  செய்திகள்

  சேலத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரர்கள்
  X

  சேலத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் 8 வயது சிறுமிக்கு சகோதரர்களே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  சேலம்:

  சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ளது போயர் தெரு. இந்த பகுதியில் வசித்து வருபவர் பாலன். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு சிறுமியும் உள்ளனர்.

  இந்த சிறுமி நேற்று புதிய பஸ்நிலையம் அருகே அழுது கொண்டிருந்தார். இதை பார்த்த மெய்யனூரை சேர்ந்த சிலர் அந்த சிறுமியை அழைத்து கொண்டு சேலம் குழந்தைகள் நல காப்பாக குழும தலைவர் சேவியரிடம் ஒப்படைத்தனர். பிறகு அவர் சிறுமியை சமாதானம் செய்து விசாரித்தார்.

  அப்போது சிறுமி தனது 2 அண்ணன்களும் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவர்களுடன் இருக்க பிடிக்கவில்லை, என்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் எனவும் கதறி அழுதார்.

  இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சேவியர் சம்பவம் குறித்து சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

  சிறுமியின் அண்ணன்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன் பேரில் சிறுமியின் அண்ணன்களை பிடிக்க மெய்யனூர் பகுதிக்கு போலீசார் சென்றனர்.

  இதை அறிந்த சிறுமியின் அண்ணன்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை செய்த சிறுமி தற்போது காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

  இந்த சம்பவம் மெய்யனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  Next Story
  ×