என் மலர்

  செய்திகள்

  கோவை அருகே ஒடிசாவை சேர்ந்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
  X

  கோவை அருகே ஒடிசாவை சேர்ந்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை அருகே மில்லில் கொத்தடிமையாக வேலை செய்த ஒடிசாவை சேர்ந்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
  சூலூர்:

  ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த மினகரியல் என்ற பெண் கந்தமால் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைதேகியிடம் ஒரு புகார் கொடுத்தார்.

  அதில் தனது மகள் கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளப்பாளையம் பகுதியில் ஒரு தனியார் பஞ்சாலையில் கொத்தடிமையாக இருந்து வருவதாகவும், எனவே மகளை மீட்டு தர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

  இதைதொடர்ந்து கந்தமால் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைதேகி தலைமையில் போலீசார் சூலூருக்கு வந்தனர்.

  பின்னர் சூலூர் போலீசார் உதவியுடன் பள்ளப்பாளையம் நூற்பாலைக்கு சென்று சோதனை நடத்தினர்.

  அப்போது மில்லில் வேலை செய்த மினகரியல் மகள் உள்பட 5 குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமையாக வேலை செய்தது தெரிய வந்தது. 5 பேரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்தது.

  பின்னர் சூலூர் போலீசாருடன் இணைந்து ஒடிசா போலீசார் 5 பேரையும் மீட்டு ஒடிசாவுக்கு அழைத்து சென்றனர்.

  மேலும் இந்த சம்பவம் பற்றி சூலூர் போலீசாரும் விசாரணை நடத்தினர். இதில் சூலூரை சேர்ந்த ஒரு பெண், ஒடிசாவில் இருந்து 5 குழந்தை தொழிலாளர்களை வேலைக்காக சூலூருக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் பஞ்சாலையில் அவர்கள் 5 பேரும் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

  இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×