என் மலர்

  செய்திகள்

  ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி காற்று: 50 விசைப்படகுகள் சேதம்
  X

  ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி காற்று: 50 விசைப்படகுகள் சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதில் 50 விசைப்படகுகள் சேதமடைந்தன. மீனவர்கள் தங்கள் படகுகளை ராமேசுவரம் துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
  ராமேசுவரம்:

  மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து சில்லரை பணத்தட்டுப்பாட்டு காரணமாக ராமேசுவரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளை ராமேசுவரம் துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

  இந்த நிலையில் நள்ளிரவில் ராமேசுவரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடல் அலைகள் சீறி எழுந்தன. இதில் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த லூர்துராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு நங்கூர் கயிறு அறுந்து சேதமடைந்து கரை ஒதுங்கியது. மேலும் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 50 விசைப்படகுகள் பலத்த காற்றில் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்து உள்ளன.

  இதில் மூன்று படகுகள் கடலில் மூழ்கின. இதையறிந்த மீனவர்கள் காற்றின் வேகம் குறைந்த பின்பு கடலில் மூழ்கிய படகுகளை மீட்டு சீரமைப்பு பணிக்காக தரைக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்தினர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம் காணப்படுவதால் கடலில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளுக்கு மீனவர்கள் கூடுதலாக நங்கூரமிட்டு பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  Next Story
  ×