search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யமுனா
    X
    யமுனா

    கோவையில் கொலை செய்யப்பட்ட சசிக்குமாரின் மனைவி கவர்னரிடம் மனு

    கோவையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமாரின் மனைவி யமுனா இன்று தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தார்.
    கவுண்டம்பாளையம்:

    கோவையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமாரின் மனைவி யமுனா இன்று தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது கணவர் சசிக்குமார் கடந்த 22.9.2016- அன்று இரவு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வரும் வழியில் கவுண்டர் மில்ஸ் பிரிவு, சர்க்கரை விநாயகர் கோவில் அருகே 4 மர்ம நபர்களால் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொலை செய்யப்பட்டு இன்றுடன் 73 நாட்கள் ஆகியும் இதுவரை கொலையாளிகள் குறித்த எந்த தகவலோ, துப்போ கிடைக்கவில்லை. பல்வேறு வகையில் விசாரணை நடத்தியும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

    மாறாக இந்து முன்னணியை சேர்ந்தவர்களையும், நிர்வாகிகளையும், ஆதரவாளர்களையும், என்னையும், எங்களது உறவினர்களை மட்டுமே விசாரணை செய்து வருகிறார்கள்.

    மேலும் எனது கணவர் இறுதி ஊர்வலத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி 90-க்கும் மேற்பட்ட வழக்குப்பதிவு செய்து 412 பேரை கைது செய்து 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தும் எனது கணவர் கொலை வழக்கை காவல்துறை திசை திருப்புகிறது. ஆனால் எனது கணவரை கொலை செய்தவர்களை இதுவரை கைது செய்யவில்லை.

    இந்த வழக்கு எந்த நிலையில் உள்ளது என்ற தகவல் தெரியவில்லை. தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு விசாரணையில் சுணக்கம் காட்டுவதாக தெரிகிறது. இதனால் எனது கணவரை கொன்றவர்கள் குறித்து வழக்கை அடுத்த கட்ட விசாரணைக்கு தாங்கள் உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×