என் மலர்

  செய்திகள்

  அரசு பள்ளியில் மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர்
  X

  அரசு பள்ளியில் மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பனப்பாக்கம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் தாக்கியதில் தலையில் ரத்தம் கொட்டியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  நெமிலி:

  வேலூர் மாவட்டம் நெமிலி அடுத்த ரெட்டிவலம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது ஒரே மகன் ஹரிதாஸ் (வயது 14). சில ஆண்டுகளுக்கு முன்பு நந்தகுமார் இறந்துவிட்டார்.

  ஆதரவின்றி தவிக்கும் மஞ்சுளா தினமும் கூலி வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்கிறார்.ஹரிதாஸ், பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  நேற்று மாலை பள்ளியில் வழக்கம் போல், சிறப்பு வகுப்பு நடந்தது. சமூக அறிவியல் ஆசிரியரான முரளிதரன் பாடம் நடத்தினார். நேற்று முன்தினம் மாணவர்களுக்கு வரைப்படம் செய்து வருமாறு கொடுத்த வீட்டு பாடத்தை சரி பார்த்தார்.

  மாணவன் ஹரிதாஸ் வீட்டு பாடம் செய்ய வில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் முரளிதரன், ஹரிதாஸை பிரம்பால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

  வகுப்பறையில் சக மாணவர்கள் முன்னிலையில் ஹரிதாஸ் தாக்கப்பட்டார். தலையில் பிரம்பு பலமாக பட்டதில் ரத்தம் பீறிட்டு கொட்டியது. இதில் மாணவர் ஹரிதாஸ் சுருண்டு விழுந்தார்.

  மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவனின் தலையில் 8 தையல் போடப்பட்டுள்ளது.

  கை, உடம்பிலும் பிரம்பு அடியால் ரத்தம் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவரின் தாய் மஞ்சுளா, நெமிலி போலீசில் புகார் அளித்தார். சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மாணவரை தாக்கிய ஆசிரியர் முரளிதரன் மீது வழக்குப்பதிவு செய்தார்.

  இதற்கிடையே ஆசிரியர் முரளிதரன் தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

  இச்சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி ஆசிரியர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாக்கப்பட்ட மாணவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×