search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: துணைவேந்தர் அறிவிப்பு
    X

    திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: துணைவேந்தர் அறிவிப்பு

    புயல், மழை காரணமாக இன்றும், நாளையும் நடைபெறும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக வேலூர் மாவட்டம் திருவலம் அருகே சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் முருகன் அறிவித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    புயல், மழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வங்க கடலில் மையம் கொண்டுள்ள நாடா புயல் புதுவை-வேதாரண்யம் இடையே நாளை காலை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம், புதுவையில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து சென்னை, காஞ்சீபுரம், திருவாரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் புயல், மழை காரணமாக இன்றும், நாளையும் நடைபெறும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக வேலூர் மாவட்டம் திருவலம் அருகே சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் முருகன் அறிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் கூறும் போது, ‘‘வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை உள்ளடக்கிய திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவில் கடந்த 4-ந் தேதி முதல் பருவத்தேர்வு நடந்து வருகிறது.

    புயல், மழை எச்சரிக்கை காரணமாக இன்றும், நாளையும் தேர்வுகள் நடைபெறாது. அந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. அந்த தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று கூறினார்.
    Next Story
    ×