என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது: ஜி.கே.வாசன்
Byமாலை மலர்21 Nov 2016 2:55 AM GMT (Updated: 21 Nov 2016 2:55 AM GMT)
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டி உள்ளார்.
கும்பகோணம்:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் அறிஞர் அண்ணா காய்கறி சந்தைக்கு நேற்று காலை சென்றார். அவர் அங்கு காய்கறி வியாபாரிகளிடம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மாற்ற முடியாமல் படும் அவதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நாட்டில் பொருளாதார சீர்திருத்தம் கொண்டு வர கருப்பு பணம், கள்ளப்பணத்தை ஒடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி முறையாக திட்டமிடாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமலும் ரூ.500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த அறிவிப்பால் நாட்டில் பொருளாதார சீர்குலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அடிப்படையில் அதிகளவில் ஏழை விவசாயிகள், சிறு, குறு வியாபாரிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில்லரை தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களும், வியாபாரிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். ரூ.2000-த்திற்கு சில்லரை கிடைக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஏ.டி.எம்.களில் 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×