search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்களில் கொள்ளையை தடுக்ககோரி போராட்டம்: அர்ஜூன் சம்பத்
    X

    கோவில்களில் கொள்ளையை தடுக்ககோரி போராட்டம்: அர்ஜூன் சம்பத்

    கோவில்களில் கொள்ளையை தடுக்ககோரி வருகிற 23-ந் தேதி திருக்குவளை தியாகராஜசுவாமி கோவில் முன்பு முற்றுகை பிரார்த்தனை போராட்டம் நடைபெறும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் இந்துமக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் 7-ந்தேதி(திங்கட்கிழமை) முதல் 20-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை மாவட்டத்துக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று இந்திய சட்ட ஆணையத்துக்கு அனுப்ப உள்ளோம்.

    காவிரி ஆற்றில் மணல்கொள்ளை, மக்காத குப்பைகள், ஆலைக்கழிவுகள் கலப்பதை தடுக்க கோரி காவிரி தாய் ரதயாத்திரை கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கியது. தலைக்காவேரியில் தொடங்கிய இந்த யாத்திரை வருகிற 13-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பூம்புகாரில் நிறைவடைகிறது.

    கும்பகோணம் மகாமககுளத்திலும், பொற்றாமரை குளத்திலும் தண்ணீர் எப்போதும் இருக்கும் வகையில் குளம் அருகே உள்ள ஆழ்துளை கிணறுகள், நீர்மூழ்கி பம்பு செட்டுகளை அகற்ற வேண்டும். புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க யாருக்கும் அனுமதி அளிக்க கூடாது. தஞ்சாவூரை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழாவை அரசு விழாவாக இல்லாமல் ஆன்மிக விழாவாக நடத்தவேண்டும்.

    சமீப காலமாக 40-க்கும் மேற்பட்ட சாதி அமைப்புகள் ராஜராஜசோழன் தங்களுடைய சாதியை சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடி வருகிறார்கள். இதனால் சாதி மோதல்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்களில் உள்ள கோவில்களில் அடிக்கடி கொள்ளை நடைபெற்று வருகிறது. இதை கண்டித்து வருகிற 23-ந் தேதி(புதன்கிழமை) திருக்குவளை தியாகராஜசுவாமி கோவில் முன்பு முற்றுகை பிரார்த்தனை போராட்டம் நடத்தப்படும்.

    கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் குருமூர்த்தி, நகர தலைவர் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் பொய்வழக்கு பதிவு செய்துள்ளதை வாபஸ் பெற வேண்டும். இல்லையெல் தமிழகம் முழுவதும் கும்பகோணம் போலீசாரை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாலா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
    Next Story
    ×