என் மலர்

  செய்திகள்

  மழையால் அசம்பாவிதங்களை தவிர்க்க மின்சார வாரியம் முன் எச்சரிக்கை நடவடிக்கை
  X

  மழையால் அசம்பாவிதங்களை தவிர்க்க மின்சார வாரியம் முன் எச்சரிக்கை நடவடிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மழையால் அசம்பாவிதங்களை தவிர்க்க மின்சார வாரியம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

  சென்னை:

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்படுகிறது.

  மின்விநியோகப் பிரிவுகளில் மின்மாற்றிகளின் பராமரிப்பு, மரக்கிளைகளை வெட்டுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல், தொய்வடைந்த மின்கம்பிகளை சரி செய்தல், கேபிள் பராமரிப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  தாழ்வான பகுதிகளில் உள்ள மின்சார பில்லர் பெட்டிகளில் தண்ணீர் புகுவதை தடுப்பதற்கு மின்சார பில்லர் பெட்டிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

  தமிழகம் முழுவதும் பகுதிவாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, மிகவும் தாழ்வான மின் கம்பிகள், சாய்ந்த, உடைந்த, பழுதடைந்த மின்கம்பங்கள், பழுதடைந்த தெருவிளக்கு மின் இணைப்பு பெட்டிகள், சேதமடைந்துள்ள புதை வட மின்கம்பிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, மறுசீரமைப்பு செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, நடைபெறும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய தலைமையகத்தில் சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

  * மின்கம்பிகளில் ஈரமான துணிகளை உலர்த்தக் கூடாது.

  * மின்கம்பங்கள் மற்றும் அவற்றை தாங்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது.

  * மின்கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம்.

  * மின்சார பில்லர் பெட்டிகள் மற்றும் மின்மாற்றி அமைப்புகள் ஆகியவற்றிற்கு அருகே செல்ல வேண்டாம்.

  * அறுந்து கிடக்கும் கம்பிகளையோ, புதை வடங்களையோ தொட வேண்டாம் எனவும், அவ்வாறு ஏதேனும் கண்டறியப்பட்டால், உடனடியாக அருகிலுள்ள தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×