என் மலர்

  செய்திகள்

  பல்லால் கடித்து தேங்காய் உரிக்கும் வாலிபர் பிரகாஷ்.
  X
  பல்லால் கடித்து தேங்காய் உரிக்கும் வாலிபர் பிரகாஷ்.

  போச்சம்பள்ளியில் 31 நொடிகளில் முழு தேங்காயை பல்லால் உரித்த வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போச்சம்பள்ளியில் 31 நொடிகளில் முழு தேங்காயை பல்லால் உரித்து வாலிபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
  போச்சம்பள்ளி:

  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த சாராகாரனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (28). இவர் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படிப்பில் சேர்ந்து வறுமை காரனமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். தற்போது இவர் மினி லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

  கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு போச்சம்பள்ளியில் ஒரு தோட்டத்தில் இருந்த போது நண்பர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு முழு தேங்காயை பல்லால் ஒரு நிமிடத்திற்குள் உரிப்பதாக ஒப்புக்கொண்டு உரித்தார்.

  அப்போது ஒரு தேங்காய் உரிக்க ஒரு நிமிடம் 20 நொடி ஆனது. தோற்று போனதால் மீண்டும் மீண்டும் முயற்சிக்கத்தொடங்கினார்.

  ஒரு மாதத்திற்குள்ளாக மீண்டும் அவர்களது நண்பர்களை அழைத்து ஒரு நிமிடத்திற்குள்ளாக ஒரு தேங்காயை உரித்து காட்டி வாழ்த்து பெற்றார். அதன்பிறகு நண்பர்கள் ஊக்கம் கொடுக்கவே தற்போது 31 நொடிக்குள்ளாக ஒரு முழு தேங்காயை பல்லால் உரித்து சாதனை படைத்து உள்ளார்.

  இன்னும் முயற்சி செய்து ஒரு நிமிடத்திற்குள்ளாக மூன்று தேங்காயை உரித்து காட்டுவதே தனது நோக்கம் என்று தெரிவித்தார். எப்படியாவது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
  Next Story
  ×