search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரி டெல்டா பாசனத்திற்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக மிக குறைவாக இருந்த நிலையில் அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து நேற்று 44.19 அடியானது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக காவிரி டெல்டா பகுதியில் மழை பெய்து வருவதாலும் நேற்று மதியம் முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    நேற்று அணையின் நீர்மட்டம் 44.19 அடியாக குறைந்ததால் அணையின் சுரங்க மின் நிலையம் வழியாக பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு அணை மின் நிலையம் வழியாக அந்த 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

    சுரங்க மின் நிலையம் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் சுரங்க மின் நிலையத்தில் மின் உற்பத்தி முற்றிலும் தடைபட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    அணைக்கு நேற்று 1072 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1030 கன அடியானது. நேற்று 44.19 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 43.92 அடியாக குறைந்தது.
    Next Story
    ×