search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை
    X

    நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

    புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று பரிசீலனை தொடங்கியது. மனுக்களை திரும்ப பெற 5-ந் தேதி இறுதி நாளாகும்.
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்பட மொத்தம் 11 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

    நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த அக்டோபர் 26-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அ.தி.மு.க. சார்பில் ஓம்சக்தி சேகர், அவருக்கு மாற்று வேட்பாளராக தமிழ்ச் செங்கோலன் உள்பட மொத்தம் 11 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலையும், மாற்று வேட்பாளராக விஜய லட்சுமியும் மனு தாக்கல் செய்தனர்.

    சுயேச்சையாக கலிய மூர்த்தி, கணேஷ், வெங்கடேசன், மாசிலா மணி, சேகர் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒட்டு மொத்தமாக 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    மனுக்கள் மீது இன்று (வியாழக்கிழமை) பரிசீலனை நடந்தது. 5-ந் தேதி மனுக்களை திரும்ப பெற இறுதி நாளாகும். அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    Next Story
    ×