என் மலர்

  செய்திகள்

  தஞ்சை - நாகையில் மீண்டும் பலத்த மழை
  X

  தஞ்சை - நாகையில் மீண்டும் பலத்த மழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை, நாகையில் மீண்டும் மழை பெய்தது. மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  தஞ்சாவூர்:

  தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. காவிரி டெல்டாவில் நேற்று முன்தினம் மழை பெய்யவில்லை.

  இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் மதியம் 1 மணி வரை சற்று வெயிலின் தாக்கம் இருந்தது.

  பின்னர் கருமேகத்துடன் வானம் காட்சியளித்தது. மாலையில் மழை பெய்ய தொடங்கியது. இன்று அதிகாலை தஞ்சையில் பலத்த மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

  திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.நாகையில் இன்று அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை பலத்த மழை பெய்தது.

  வேதாரண்யம், சீர்காழியிலும் இரவு பலத்த மழை கொட்டியது. மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

  வலங்கைமான் -28.2

  குடவாசல் - 46.8

  மயிலாடுதுறை - 46.5

  மஞ்சளாறு - 26.6

  மணல்மேடு - 8.4

  சீர்காழி - 37.7

  கோரையாறு - 16.2

  திருவாரூர் - 23.2

  நாகை - 136.1

  தலைஞாயிறு - 58.1

  திருப்பூண்டி - 62.4

  வேதாரண்யம் - 48.1

  பூதலூர் 13.8

  வெட்டிக்காடு - 11.3

  ஆயக்குடி - 14.4

  ஒரத்தநாடு - 8.4

  மதுக்கூர் - 8.6

  பட்டுக்கோட்டை - 8.5

  Next Story
  ×