என் மலர்
செய்திகள்

பெரியாறு அணையில் மழை வேண்டி அதிகாரிகள் சிறப்பு பூஜை
பெரியாறு அணைப்பகுதியில் மழை வேண்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.
தேனி:
பெரியாறு அணைப் பகுதியில் மழை வேண்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.
முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.1.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரகவும் திகழ்கிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் எதிர்பார்த்தபடி அதிகரிக்கவில்லை. மேலும் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 111 அடி தண்ணீரே அணையில் உள்ளது. இதன் காரணமாக பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் போதிய தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பெரியாறு அணையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ய வேண்டி தேனி வீரபாண்டி முலலைப்பெரியாற்றின் கரையோரம் பொதுப் பணித்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.
இதில் பெரியாறு வைகை வடிநில தோட்டப் பொறியாளர் முத்துப்பாண்டி, செயற்பொறியாளர் ராஜகோபால், புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடகிழக்கு பருவமழையாவது நன்கு பொழிந்து அணை நிரம்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பூஜை நடத்தப்பட்டது.

Next Story