என் மலர்

  செய்திகள்

  இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
  X

  இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
  ராமேசுவரம்:

  கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கி முனையில், இலங்கை கடற்படை தாக்கி விரட்டியடித்தது. இது தொடர்பாக மீனவர்கள் சங்க கூட்டம் ராமேசுவரத்தில் இன்று நடந்தது. இதில் சங்க தலைவர்கள் தேவதாஸ், போஸ், சகாயம், எமரிட் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

  ராமேசுவரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையை கண்டிப்பதும், இலங்கையில் உள்ள 114 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இருநாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  Next Story
  ×