என் மலர்

  செய்திகள்

  காவிரி பிரச்சினை: மக்களுடன் இணைந்து போராட தயார் - இந்திய கம்யூ. மகேந்திரன் பேட்டி
  X

  காவிரி பிரச்சினை: மக்களுடன் இணைந்து போராட தயார் - இந்திய கம்யூ. மகேந்திரன் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
  தஞ்சாவூர்:

  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை அறிவித்தது. இடஒதுக்கீடு தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மையமாக உள்ளது. ஜனநாயகத்தின் உயிர்ப்பாக இருக்கக்கூடிய இடஒதுக்கீட்டை புறக்கணித்து தேர்தல் ஆணையம் அறிவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மாண்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற மரபு அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து இருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. எந்த குறைபாடும் இன்றி இட ஒதுக்கீடு, சுழற்சிமுறை இட ஒதுக்கீடு, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு என இட ஒதுக்கீடு முறையை முழுமையாக பின்பற்றி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.

  தமிழக மக்களுக்கு விரோதமாக, சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை புறக்கணித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமாட்டோம் என்று மத்தியஅரசு அறிவித்து இருப்பதை கண்டிக்கிறோம். கர்நாடகத்தில் வரும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இந்திய ஒற்றுமையை பலி கொடுக்க பிரதமர் மோடி தயாராகிவிட்டார். தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டும் அவர் மறுத்துவிட்டார். காஷ்மீர் பிரச்சினை மூலம் 5 மாநிலங்களில் வெற்றி பெற்றுவிடலாம் என மோடி எண்ணுகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 8 கோடி தமிழர்களின் உரிமையை பறிப்பது அழகல்ல.

  தமிழக மக்கள் கட்சி வேறுபாடு இன்றி ஒற்றுமையாக நின்று நமது உரிமை கிடைக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும். மக்களுடன் இணைந்து போராட கம்யூனிஸ்டு கட்சிகள் தயாராக இருக்கிறது. வருகிற 7-ந் தேதி மக்கள் நலக்கூட்டணி சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தமிழகம், கர்நாடகாவில் உள்ள அணைகளை மேற்பார்வை செய்யும் உரிமை அந்த குழுவுக்கு சென்றுவிடும்.

  கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் அரசு நேர்மையான அரசாக இருந்தால் குழு அமைப்பதை வரவேற்று இருக்க வேண்டும். நேர்மையின்மையுடன் செயல்படும் கர்நாடகஅரசுக்கு மத்தியஅரசு துணை போகுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்ற இறுதிதீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் காவிரி நடுவர் மன்ற இறுதிதீர்ப்பு நீர்த்து போகும் வகையில் தமிழகத்திற்கு மத்தியஅரசு துரோகம் செய்து வருகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×