என் மலர்

  செய்திகள்

  தஞ்சை அருகே மோடி உருவபொம்மையை எரித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்தபடம்.
  X
  தஞ்சை அருகே மோடி உருவபொம்மையை எரித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்தபடம்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு: தஞ்சை - கும்பகோணத்தில் மோடி உருவபொம்மை எரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து தஞ்சை ரெயில் நிலையம் முன்பு பிரதமர் நரேந்திரமோடி உருவபொம்மையை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  தஞ்சாவூர்:

  காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து சுப்ரீம்கோர்ட்டில் மத்தியஅரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு காவிரி டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  இந்தநிலையில் மத்திய அரசின் முடிவை கண்டித்து தஞ்சை ரெயில் நிலையம் முன்பு பிரதமர் நரேந்திரமோடி உருவபொம்மையை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் நேற்றுமாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மோடியின் உருவபடத்தையும் தீயிலிட்டு எரித்தனர்.

  இதில் தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர்கள் சி.முருகேசன், சதா.முத்துகிருஷ்ணன், தமிழர் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளரும், காவிரி உரிமை மீட்புக்குழுவை சேர்ந்தவருமான குழ.பால்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், மாவட்ட செயலாளர் ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டு கர்நாடகஅரசுக்கு துணை போகாமல் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியஅரசு அமைக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

  இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக கூறி தஞ்சை புது ஆற்றுப்பாலம் அருகே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மோடி உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன், மாநகரச்செயலாளர் செந்தில்குமார், தஞ்சை ஒன்றிய செயலாளர் மாலதி, விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜீவக்குமார், ஒன்றிய செயலாளர் அபிமன்னன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

  மோடி உருவபொம்மையை எரித்த போது போலீசார் அதனை அணைக்க முயன்றனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

  கும்பகோணத்தில் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து தமிழ் தேசிய இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகர செயலாளர் விடுதலை சுடர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் எதிரே சாலை சந்திப்பில் கூடினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
  Next Story
  ×