என் மலர்

  செய்திகள்

  சேலம் அருகே முதியவர் அடித்துக் கொலை: மருமகன் கைது
  X

  சேலம் அருகே முதியவர் அடித்துக் கொலை: மருமகன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அருகே முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள கோனேரிப்பட்டி கிறிஸ்டியன் தெருவை சேர்ந்தவர் அந்தோணி பால்ராஜ் (வயது 36). இவரது மனைவி அருணா(28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

  அந்தோணி பால்ராஜ் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். இதனை அவரது தாய் மாமன் லாரன்ஸ் (73) கண்டித்தார். இதில் கோபம் அடைந்த அந்தோணி பால்ராஜ் ஆஸ்பெட்டாஸ் சீட்டை எடுத்து தாய் மாமன் என்றும் பாராமல் அவரது தலையில் ஓங்கி அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

  இந்த கொலை சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை வலைவீசி தேடி வந்தனர்.

  இந்த நிலையில் அந்தோணி பால்ராஜ் ஈரோடு பஸ் நிலையத்தில் வெளியூருக்கு தப்பி செல்வதற்காக நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதையடுத்து, ஈரோடு மாவட்ட போலீசார் உதவியுடன் தம்மம்பட்டி போலீசார், ஈரோடு பஸ் நிலையம் சென்று இன்று அதிகாலையில் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். * * * ஸி.வி.க்ஷீணீழீ04102016

  Next Story
  ×