என் மலர்

  செய்திகள்

  பழனி முருகன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ1.76 கோடி வருமானம்
  X

  பழனி முருகன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ1.76 கோடி வருமானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்திய தொகைகளை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது.
  பழனி:

  பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்திய தொகைகளை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது.

  கோவில் இணை ஆணையர் ராஜ மாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, திண்டுக்கல் இந்து சமய அறநியைத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், அறநிலையத்துறை ஆய்வாளர் (பொறுப்பு) முருகையா, முதுநிலை கணக்கு அதிகாரி வீராச்சாமி, மேலாளர் உமா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.

  கடந்த மாதம் 9-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 24 நாட்களில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை ரூ.1 கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 213 ஆகும். மேலும் தங்கம் 715 கிராம், வெள்ளி 10700 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1481 இருந்தன. இது தவிர, வெள்ளி வேல், வெள்ளிகட்டிகள், வெள்ளி அரணா, வெள்ளி கிரீடம் போன்ற பொருட்களும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
  அத்துடன் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், வெள்ளி குத்துவிளக்குகள், கடிகாரம், பட்டு வேஷ்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் செலுத்தபட்டிருந்தன.
  Next Story
  ×