என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டுப்பாளையம் நகராட்சி தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகாததால் நிர்வாகிகள் போராட்டம்
Byமாலை மலர்3 Oct 2016 11:55 AM GMT (Updated: 3 Oct 2016 11:55 AM GMT)
மேட்டுப்பாளையம் நகராட்சி தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகாததால் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் வீடு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இதுவரை 84 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (3-ந் தேதி) மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இந்த நிலையில் நகராட்சி தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிப்பு செய்யப்படவில்லை. இதனால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட நகர நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யாமல் வேட்பாளர்களை தன்னிச்சையாக தேர்வு செய்து வருவதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பி.டி.பாபு தலைமையில் நகர நிர்வாகிகள் நேற்று இரவு மேட்டுப்பாளையம் அவுசிங் யூனிட்டில் உள்ள மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகம் முன்பு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும் போது,‘‘ஒருசில வார்டுகளில் பிரச்சினைகள் இருந்து வருவதால் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. எனினும் இன்று (3-ந் தேதி) காலைக்குள் அறிவிக்கப்பட்டு விடும்’’ என்று தெரிவித்தார்.

Next Story
×