search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருமங்கலத்தில் உள்ள காந்தி சிலை
    X
    திருமங்கலத்தில் உள்ள காந்தி சிலை

    மகாத்மா காந்தியை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள்: திருமங்கலத்தில் பொதுமக்கள் அதிர்ச்சி

    திருமங்கலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல்வாதிகள் யாரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தாது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பேரையூர்:

    தேசபிதா மகாத்மா காந்தியின் 147-வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பிரதமர் முதல் கடைகோடி மக்கள் வரை அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஆனால் மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்கு தெருவில் உள்ள காந்தி சிலைக்கு யாரும் மரியாதை செலுத்தவில்லை. மேலும் காந்தி ஜெயந்தியையொட்டி பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாததால் அங்குள்ள காந்தி சிலை மாசடைந்து காணப்பட்டது.



    உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கும் காந்தியின் ஞாபகம் வரவில்லை. திருமங்கலம் நகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்ளாதது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாலையில் கதர் வாரியம் சார்பில் மட்டும் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    மேலும் காந்தி சிலை அருகே உள்ள ராட்டை சின்னம் வரையப்பட்டு இருந்த கொடியும் கிழிந்து தொங்கியது.
    Next Story
    ×