என் மலர்

  செய்திகள்

  விஜயகாந்த் 13-ந்தேதி ஆத்தூர் வருகை: முஸ்லீம் மக்களுக்கு குர்பானி வழங்குகிறார்
  X

  விஜயகாந்த் 13-ந்தேதி ஆத்தூர் வருகை: முஸ்லீம் மக்களுக்கு குர்பானி வழங்குகிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆத்தூரை அடுத்த பழைய பேட்டை காதர்பேட்டை நபி ஷாகிப் பள்ளிவாசல் அருகே வருகிற 13-ந் தேதி நடைபெறும் விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டு முஸ்லீம் மக்களுக்கு குர்பானி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
  ஆத்தூர்:

  பக்ரீத் பண்டிகையையொட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை முஸ்லீம் மக்களுக்கு குர்பானி வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு அவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பழைய பேட்டை காதர்பேட்டை நபி ஷாகிப் பள்ளிவாசல் அருகே வருகிற 13-ந் தேதி நடைபெறும் விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டு முஸ்லீம் மக்களுக்கு குர்பானி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

  இந்த விழாவில் தே.மு.தி.க.பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சேலம் கிழக்கு, மேற்கு, மற்றும் சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர்கள் செய்து உள்ளனர்.

  இந்த விழாவுக்கு பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் போலீசில் தே.மு.தி.க.நிர்வாகிகள் மனு கொடுத்து உள்ளனர்.
  Next Story
  ×