search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

    புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழக நெல்லை மண்டல பொது மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    நெல்லை:

    அரசு போக்குவரத்துக்கழக நெல்லை மண்டல பொது மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதி பெருமாள் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபடுவதற்காக வசதியாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளான வருகிற 17, 24-ந் தேதிகளிலும், அடுத்த மாதம் 1, 8, 15 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மண்டலம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    சிறப்பு பஸ்கள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும். ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களுக்கு சென்று விட்டு இரவில் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து சேரும்.

    ஒரு நபருக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பஸ் கட்டணத்தை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேற்கண்ட 5 புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கீழ்கண்ட வழித்தடங்களிலும் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து பெருமாள் கோவில் அமைந்துள்ள திருவேங்கடநாதபும், கருங்குளம், எட்டெழுத்து பெருமாள் கோவில், நம்பிகோவில் ஆகிய இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதேபோல் திருக்குறுங்குடியில் இருந்து நம்பி கோவிலுக்கும், வள்ளியூரில் இருந்து களக்காடு வழியாக திருக்குறுங்குடிக்கும், அம்பையில் இருந்து அத்தாளநல்லூருக்கும், வீரவநல்லூரில் இருந்து அத்தாளநல்லூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூர், குரும்பூர் ஆகிய ஊர்களில் இருந்தும் நவ திருப்பதி தலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×