என் மலர்

  செய்திகள்

  கோவை-நீலகிரியில் இருந்து பெங்களூருக்கு 3-வது நாளாக பஸ் போக்குவரத்து நிறுத்தம்
  X

  கோவை-நீலகிரியில் இருந்து பெங்களூருக்கு 3-வது நாளாக பஸ் போக்குவரத்து நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மற்றும் நீலகிரியில் இருந்து பெங்களூருக்கு 3-வது நாளாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தன.

  கோவை:

  காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது..

  இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலம் மைசூரு, மண்டியா பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது.

  இதன்காரணமாக கோவையில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் இன்று 3-வது நாளாக இயக்கப்பட வில்லை.

  தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் , கர்நாடகா மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் 60 பஸ்களும் இன்று 3-வது நாளாக டெப்போக்கள், பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டு இருந்தன.

  ஒரு சில பஸ்கள் ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனை சாவடி வரை இயக்கப்பட்டன. கர்நாடக மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள், மற்றும் சுற்றுலாவுக்காக வந்தவர்கள் பெரும் சிரமப்பட்டனர்.

  இதனால் பெங்களூர் செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

  நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்பட பல்வேறு இடங்களுக்கு கர்நாடகா- தமிழக அரசு பஸ்கள் என மொத்தம் 40 பஸ்கள் இயக்கப்ப்படுகிறது.

  தற்போது கர்நாடகாவில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக வாகனங்கள் எதையும் போலீசார் அனுமதிக்க வில்லை.

  இன்று 3-வது நாளாக அந்த வாகனங்கள் அனைத்தும் கர்நாடக மாநில எல்லையான கக்க நெல்லாவில் திருப்பி அனுப்பப்பட்டன.

  அதே போல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இதுமட்டுமின்றி தமிழக- கர்நாடக அரசு பஸ்கள் அந்தந்த எல்லை பகுதி வரை இயக்கப்பட்டு வருகிறது.

  இதனால் கர்நாடக செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதுமட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் தங்களது சொந்த பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அவதிக்குள்ளானார்கள்.

  Next Story
  ×